கட்டுநாயக்காவில் ஆடைத்தொழிற்சாலைக்கு மூடுவிழா; 1400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நடுத்தெருவில்...?
tamil news:
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக மண்டலத்தில் இயங்கிக்கொண்டிருந்த 'NEXT' ஆடை உற்பத்தி நிறுவனம் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென இயங்குவதை நிறுத்தியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் முடிவால் அங்கு பணியாற்றிய சுமார் 1,400 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து பெரும் சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
தொழிற்சாலையின் கதவுகள் தற்போது பூட்டப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் உள்ள சிலர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்கள்.
மேலும் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை.
இதனால் ஊழியர்கள் தங்களது எதிர்காலம் குறித்து புரியாமலும் ஆதரவின்றியும் தவிக்கின்றனர்.
இடதுசாரி கொள்கை கொண்ட அனுர அரசாங்கத்தில் இவ்வாறு தொழிலாளர்களின் இந்த பரிதாபமாக குறித்து கவனயீனமாக இருப்பது அனுரவின் மீதான நம்பிக்கையை உடைப்பதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

