நெல்லியடியில் கடை ஒன்றில் அதிகாலையில் தீ!!!
tamil news:
யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் இன்றையதினம்(21.05.2025) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புறநகர் வணிகப்பகுதியில் உள்ள கடை ஒன்றிலேயே இவ்வாறு ஏற்பட்ட தீயால் கணிசமான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
ஆரம்ப கட்ட தகவலின்படி,
சுமார் 20 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்டதும், அங்கிருந்த கடைக்காரர்கள், பொதுமக்கள் மற்றும் கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு அணி 4.42 மணிக்கு அழைக்கப்பட்டநிலையில்,
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது.
மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்கான முதற்காரணமாக சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேலும் சம்பவ இடத்தில் விரைந்து செயற்பட்ட பொதுமக்களுக்கும், பிரதேச சபை ஊழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் கரவெட்டி பிரதேச சபை செயலாளர் ஹம்சனாதன்.


