இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: இலங்கைக்கு கடுமையான பாதிப்பு!!!
tamil news:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான வளர்ந்துவரும் முரண்பாட்டினால் இலங்கையின் வெற்றிலை ஏற்றுமதியை பெரிதும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போர்ச்சூழ்நிலையில்,
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விமானசேவைகள் இடைநிறுத்தம் காரணமாக குறிப்பாக கராச்சிக்கு அனுப்ப வேண்டிய வெற்றிலைகள் அனுப்பப்படாமல் கொழும்பு விமானநிலையத்தில் தேங்கியுள்ளன எனக் கூறுகின்றார் குளியாப்பிட்டிய எப்பலதெனிய வெற்றிலை விவசாயிகள் நல சங்கத் தலைவர் சந்திரசிறி.
பாகிஸ்தான் இலங்கையிலிருந்து பெரிய அளவில் வெற்றிலை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கின்றது.
வாரம் இருமுறை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுவந்த வெற்றிலை தற்போது வர்த்தக நிலைத்தன்மையை இழந்துள்ளது.
இதனால் உள்நாட்டுச் சந்தைக்கு அதிகளவு வெற்றிலை சேர வாய்ப்பு உள்ளது.
அதன்படி எதிர்காலத்தில் வெற்றிலை விலை குறையும் அபாயம் இருப்பதாகவும் சந்திரசிறி எச்சரிக்கின்றார்.

