குருந்தூர்மலையில் மீண்டும் குழப்பும் சிங்கள பிக்கு; விவசாயம் செய்த மூவர் கைது!!!
tamil news:
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர்மலை அருகேயுள்ள விவசாய நிலமொன்றில் இன்றையதினம்(10.05.2025) காலை விவசாயத்திற்காக நிலத்தை உழவுசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இதன்போது, குறித்த விவசாய நில உரிமையாளர் சசிகுமார் என்பவர் தனது பணியாளர்களை அனுப்பி நீர்ப்பாசன வசதிகளை பயன்படுத்தி உழவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் குருந்தூர்மலையில் அத்துமீறி கட்டப்பட்ட பௌத்த விகாரையின் தேரர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர்,
காவல்துறையுடன் இணைந்து அந்த உழவுப் பணிகளை தடுத்துநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து விவசாய பணியில் ஈடுபட்டிருந்த மூவரையும் உழவியந்திரத்துடன் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு காவற்துறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை நில உரிமையாளரான சசிகுமார் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றார் என கூறப்படுகின்றது.
அவரது பணியாட்கள் ஊடாகவே விவசாய பணிகள் முன்னெடுக்கப்பட்டநிலையில்,
இந்த கைது நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தன்னை இனவாதம் இல்லத அரசாக காட்டிக்கொள்ளும் அனுர தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியிலும் சிங்களப் பேரினவாத போக்கு அவர்களின் உண்மை முகத்தை காட்டியுள்ளது.

