மதகுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி!!!
tamil news:
வவுனியா இறம்பைக்குளம் சந்தியில் இன்றையதினம்(10.05.2025) ஏற்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று மதகுடன் மோதி கடுமையாக சேதமடைந்தது.
இந்த சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் A9 பிரதான வீதியில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,
முச்சக்கரவண்டி பெரிதும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது என தெரிகின்றது.
சம்பவத்தை தொடர்ந்து வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


