பாகிஸ்தானில் உள்ள தளத்தை இந்தியா நாசம் செய்தது!!!
tamil news:
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு ஏவுகணை தளம், இந்திய பாதுகாப்பு படையினரால் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தத் தளம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள லூனி மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே அமைந்திருந்ததாக கூறப்படுகின்றது.
இது, கடந்த நாட்களில் இந்தியாவை நோக்கி பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட இடங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, இந்தியா 'ஒப்பரேஷன் சிந்தூர்' எனும் நடவடிக்கையை மேற்கொண்டது.
இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பாகிஸ்தான் விமானப்படை தளங்களுக்கு அருகில் இந்திய ஏவுகணைகள் பாய்ந்த நிலையில்,
அவற்றில் சில பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டெல்லி நோக்கி பாய்ந்ததாக கூறப்படும் பாகிஸ்தானின் FATAH-1 நெடுந்தூர ஏவுகணையை இந்திய பாதுகாப்பு அமைப்பு தடுத்து அழித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது எல்லைப்பகுதியில் நிலவும் நிலைமை குறித்தும்,
இருதரப்பு பதிலடி நடவடிக்கைகள் தொடரும் வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

