தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கத் தயாரா? கஜேந்திரகுமாரின் முக்கிய அறிக்கை
tamil news:
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசுக்கட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(10.05.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த தேர்தலுக்குப் பிறகு தமிழ் மக்கள் தேசியப் பாதையிலிருந்து விலகிவிட்டதாக கூறப்படும் செய்திகள் தவறானவை என தெரிவித்தார்.
அதுபற்றிக் குறிப்பிட்ட அவர்,
"நெருக்கடியான கால சூழலில் தமிழ் மக்கள் மீண்டும் தேசிய நிலைப்பாட்டை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.
இந்த முடிவுகள் தென்னிலங்கை இனவாதங்களுக்கெதிராக ஒரு தெளிவான செய்தியாகும்."
என கூறினார்.
மேலும்,
"தமிழ்த்தேசியம் பல பிரதேசங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையிலும்,
ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையைப் பெறமுடியாதநிலை காணப்படுகின்றது.
இந்தச் சூழலில் தமிழ் அரசியல் ஒற்றுமை மிக அவசியமானதாக உள்ளது.
அதனால் தங்களது கொள்கை அடிப்படையில் தமிழரசு கட்சிக்கு ஆதரவு வழங்க தயார்."
என்றார்.
