முகத்தை மறைந்துக்கொண்டு குழுவினர் தாக்கியதில் கடை உரிமையாளர் படுகாயம்!!!
tamil news:
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றையதினம்(10.05.2025) அதிகாலை ஒரு கடை உரிமையாளர் அடையாளந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதில் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை வீதியில் உள்ள தனது கடையை திறக்கச் சென்றபோது,
சுமார் காலை 6.15 மணியளவில், முகங்களை துணியால் கட்டிக்கொண்டநிலையில் இருந்த இருவர் அவரை வழியில் தடுத்து தாக்குதல் நடத்தினர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் சிக்கியவர் அச்சுவேலி பகுதியில் உணவகமொன்றை நடாத்திவரும் 54 வயதுடைய சின்னையா ஆலாலசுந்தரம் ஆவார்.
அவர் முதலில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


