அம்ஷிகாவிற்கான நீதியை சபையில் உரக்ககேட்ட மனோகணேசன்!!!
tamil news:
டில்ஷி அம்ஷிகா மரணத்திற்கு நீதிகோரும் அவரது பெற்றோரின் அமைதிப்போராட்டத்தை வீழ்ச்சியடையச் செய்ய காவற்துறையினர் தண்ணீர்வீச்சு போன்ற நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளதைக் கண்டித்து,
அந்த செயலைத் தடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் எழுந்துரைத்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர்,
"நீதி கேட்டெழும் இந்த மக்கள் எந்தவித ஆயுதங்களோ,
கலவர முயற்சிகளோ இல்லாமல் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இவர்களின் குரலை கேட்கும் ஆணையம் உடனடியாக அமைக்கப்படவேண்டும்."
என்றார்.
மேலும்,
"இந்த மாணவி கல்வி பயின்ற தனியார் நிறுவனம்,
ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளரால் நடத்தப்படுவதாக பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.
எனவே எந்த அரசியல் அழுத்தமும் இல்லாமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்."
என வலியுறுத்தினார்.
