வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ஐ.பி.எல் தொடரின் நிலை என்ன? இங்கிலாந்து ஆலோசனை!


tamil news:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் போர்ச்சூழல் காரணமாக, இண்டியன் ப்ரீமியர் லீக்(IPL) தொடரின் மீதமுள்ள போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் போட்டிகளை நடத்துவதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து தற்போது முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.


அந்தவகையில் ஐ.பி.எல் தொடரின் பிளே ஆஃப் சுற்று உட்பட 16 போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


இந்த போட்டிகளை மீண்டும் எப்போது, எங்கு நடத்தலாம் என்பதைக் குறித்துப் பல்வேறு பரிசீலனைகள் நடந்துவருகின்றன.


இந்தநிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB) பிரதம நிறைவேற்று அதிகாரியான ரிச்சட் கோல்ட்,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் (BCCI) கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதில் இந்தியா போட்டிகளை விரைவில் நடத்த முடியாவிட்டால் இங்கிலாந்து மைதானங்களில் மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளை நடத்த தயாராக உள்ளதாக அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் போட்டிகளை நடத்தும் சாத்தியம் குறித்து ECB-யின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாகவும் ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ளன.