ஜனாதிபதியை நேரில் சந்திக்கமுடியாது! முயன்றவரை கைதுசெய்த காவற்துறை
tamil news:
ஜனாதிபதியுடன் நேரில் பேசவேண்டும் என முயன்ற நபர் ஒருவர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போர்வெற்றி நிகழ்வில் பங்கேற்க சென்ற ஜனாதிபதியைச் சந்திக்க ஆவலுடன் குறித்த நபர் வந்துள்ளார்.
இதனையடுத்து அவரை தடுத்த காவற்துறை அங்கிருந்தவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியதாக காரணம் கூறி கைதுசெய்துள்ளது.
இந்நிலையில் அந்த நபருடன் இருந்த 2 சிறிய குழந்தைகளும் காவற்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தலங்கம காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்,
கைதுசெய்யும் நேரத்தில் காவற்துறை அதிகாரிகளை கடித்ததாகவும்,
அதுபோல் சந்திப்புக்கு அனுமதி வழங்கவில்லை என்றால் பிள்ளைகளுடன் வாகனத்தில் மோதுண்டு உயிரை மாய்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
மனநிலை குறித்த ஆய்வுக்கு உத்தரவு
சந்தேக நபரின் மனநிலையைப் பரிசோதிக்கும்படி மருத்துவச் சான்றிதழுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த சந்தேகநபர் கூறுகையில்,
காணி உரிமை தொடர்பாக இதுவரை 65 முறைப்பாடுகளை பதிவு செய்திருந்ததாகவும்,
அந்தப் புகார்களுக்கெதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அதனாலேயே ஜனாதிபதியை சந்திக்க முற்பட்டதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
