அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: தொடங்கிய ட்ரம்ப்!!!
tamil news:
அமெரிக்காவை விட்டு வெளியேறும் இறுதி உத்தரவை பெற்றபோதும் நாட்டை விட்டுச்செல்லாமல் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோர் மீது ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக சுமார் 4,500 பேர் மீது தொகுப்பாக 500 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் ஒருவருக்கு குறைந்தபட்சமாக 5,000 டொலர்களும், அதிகபட்சமாக 1.8 மில்லியன் டொலர்களும் அபராதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பலர் ஏற்கனவே பொருளாதார சிக்கல்களுடன் வாழ்ந்து வருவதால் இந்த அபராதத் தொகைகளை 30 நாட்களுக்குள் செலுத்துவது எப்படி என்பதையே தெரியாமல் திணறுகிறார்கள்.
இந்த நடவடிக்கை நாடுவிட்டு வெளியேற கட்டாயத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
மேலும் நேற்றையதினம்(20.05.2025) இந்திய உச்சநீதிமன்றத்தில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டநிலையில் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளமை கவனத்திறைகுரியது.

