வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வாழைச்சேனையில் மண் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் – இருவர் கைது!!!


tamil news:

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கிண்ணியடி பகுதியில் மீன்வள அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் நடைபெறும் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூர்வாசிகள் இன்றையதினம்(08.05.2025) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அவர்கள், கனரக வாகனங்கள் மூலம் மண்ணை கொண்டு செல்லும் செயலைத் தடுக்க வீதியில் இடையூறு ஏற்படுத்தினர்.


"எங்கள் மண் வளம் அழிக்கப்படக்கூடாது", "சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என பதாகைகளை தாங்கிக்கொண்டு திட்டத்தை நிறுத்தக் கோரிய மக்களின் எதிர்ப்பால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


இந்தநிலையில் போராட்டக்காரர்களுடன் பேச சென்ற முன்னாள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் உள்ளிட்ட இருவரை காவற்துறையினர் கைதுசெய்ததால் பதற்றம் அதிகரித்தது.


கைதுசெய்யப்பட்ட இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


அந்தப் பகுதியில் 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மீன்வள வளர்ப்பு திட்டத்தின் பெயரில் தனியார் காணியில் பெரிய அளவில் மண் அகழப்பட்டு,

விற்பனைக்காக வெளியே கொண்டுசெல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த காலத்திலும் இதற்கு எதிராக உள்ளூர்வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


மீண்டும் கடந்த சில நாட்களாக மண் அகழ்வு மீளத் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து,

பொதுமக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் மீண்டும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.


அந்நிலையில் அனுமதியுடன் செயல்படுவதாக கூறிய அமைப்புக்களுக்கு எதிராக மக்கள் உரிமைகளை வலியுறுத்தினர்.


சம்பவத்தையடுத்து மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் – நில அளவை, சுற்றாடல், மீன்வள வளர்ப்பு மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்ட விசேட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


அதில் விவகாரம் முடிவு செய்யப்படும் வரை மண் அகழ்வை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


இருப்பினும், திட்டம் முழுமையாக நிறைவேறுவதை தடுக்கும் நோக்கில் மக்கள் தற்போது கூடாரங்கள் அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.