11Kg ஐஸ் போதைப்பொருடன் ஒருவர் கைது!
amil news: மாலபே, கஹந்தோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 11.02Kg 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 180g ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரிடமிருந்து சுமார் 255,000 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் கடத்தலிலிருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவற்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின்(PNB) அதிகாரிகளுக்கு நேற்றையதினம்(22.01.2025) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மல்வானை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேநேரம், அவரை இன்று(23.01.2025) கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தவும் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு(PNB) மேற்கொண்டுவருகின்றது.