வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

புகைத்தல் பழக்கம் ஆண்களிடையே குறைவு; பெண்களிடையே அதிகரிப்பு! வைத்திய நிபுணர்கள்


tamil news:

"ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்தநிலையில் பெண்களிடையே அதிகரித்து வருகின்றது, இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது."

இவ்வாறு சிறுவர் சுவாசநோய் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும்

"எமது உடலில் சுவாச அமைப்பு மிகவும் முக்கியமானது.


ஏனெனில், மனிதர்கள் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் வாழ முடியும்; ஆனால் சுவாசிக்காமல் வாழமுடியாது."

எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



தொடர்ந்து சுவாச நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமன்மலி தல்பதடு தெரிவிக்கையில்,

"உலகளவில் இறப்புக்கான ஏழாவது முக்கியகாரணியாக நாற்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்(Chronic Obstructive Pulmonary Disease (COPD)) உள்ளது.


இந்த நோய்நிலைமை தொடர்பில் சமூகத்தில் சரியான விழிப்புணர்வு இல்லை.


இந்த நோய் பல தசாப்தங்களாக கவனிக்கப்படாமல் சிகிச்சை அளிக்கப்படாத ஆஸ்துமா அல்லது புகைபிடித்தல் காரணமாக ஏற்படுகின்றது.


மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் பொதுவாக 45 வயதுக்குப் பின்னர் ஏற்படும்.


நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்ட 10மூ பேர் நாற்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017ம் ஆண்டு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.


இதற்கு குறைந்தளவிலான விழிப்புணர்வே காரணமாகும்.


காற்று மாசுபாடு மற்றும் முகக்கவசங்களை அணிவதை தவிர்த்தல் ஆகியனவும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்பட காரணிகளாக அமைகின்றன.


நடப்பதில் சிரமம், மூச்சுத் திணறல் மற்றும் சளி போன்ற சிறிய நோய்களுக்கு அதிக உணர்திறன் ஆகியவை அறிகுறிகளாகும்.


ஆஸ்துமாவைப் போலல்லாமல் COPD என்பது ஒரு நாட்பட்ட நோயாகும்.


நீண்ட காலம் இன்ஹேலர்களை பயன்படுத்துதல் முதன்மை சிகிச்சையாக உள்ளது."

என தெரிவித்துள்ளார்.