வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

13 இல் கைவைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை! தமிழகத்தில் கூறிய ஜே.வி.பி சந்திரசேகர்


tamil news:

"13வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்றநிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை"

இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


சென்னையில் இடம்பெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த அமைச்சர், பிறிதொரு தமிழ்நாட்டுத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர்  இதனை தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,

"13வது திருத்தச்சட்டம் தொடர்பாக நாங்கள் என்ன கருதுகின்றோம் என்பதை விட தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தான் இங்கு முக்கியமான விடயமாகும்.


தமிழ் மக்கள் 13வது திருத்தச்சட்டத்தை தமக்கு கிடைத்த உரிமையாகக் கருதுகின்றார்கள் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ளமுடிந்தது.


அதனால்தான் நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம்.


அதுமட்டுமன்றி, 13வது திருத்தச்சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றது.


அந்தவகையில் வருகின்ற மார்ச் மாதம் உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு, இந்த ஆண்டின் இறுதியில்/ அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாணசபைகளுக்கான தேர்தலையும் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.


மேலும்,

தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் விடயமாக 13வது திருத்தச்சட்டத்தினையும், மாகாண சபை முறைமையும் கருதுகின்றபோது அதனை அர்த்தபுஷ்டியான நிர்வாகக் கட்டமைப்பாக செயற்படுத்திப்பார்க்க நாங்கள் தயாராகவே உள்ளோம்.


ஆகவே 13வது திருத்தச்சட்ட விடயத்தில் எமது நிலைப்பாட்டை விடவும் தமிழ் மக்களின் நிலைப்பாடே முக்கியமானது.


அதேசமயம் அநுரகுமார தலைமையிலான அரசாங்கமானது அனைத்து மக்களின் ஆணையுடனேயே ஆட்சிப்பொறுப்பினைப் பெற்றுள்ளது."

என தெரிவித்திருந்தார்.


மேலும்,

அநுரகுமார தலைமையிலான அரசாங்கமானது அனைத்து மக்களுக்கான அரசாங்கமாகச் செயற்படவுள்ளதோடு மக்கள் நலன்களுக்கே முக்கியத்துவமளிக்கும் என்பதை தெரிவிப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.