வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மசாஜ்சென்டர் உரிமையாளருக்கு 15 ஆண்டுகள் சிறை!!!


tamil news: 'சிகிச்சை நிபுணர்' தொழிலுக்காக இந்தோனேசியாவிலிருந்து 3 இளம் பெண்களை அழைத்துவந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்கு மசாஜ்சென்டர் உரிமையாளருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன்,

குறித்த தண்டனையை 5 ஆண்டுகளுக்குள் அனுபவிக்கவேண்டும் என்று இன்று(24.01.2025) உத்தரவிட்டுள்ளது.


நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி 'ஆதித்யா படபெந்திகே' இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.


மேலும், பாதிக்கப்பட்ட 3 இளம் பெண்களுக்கும் தலா 2 இலட்சத்து 50இ000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் பிரதிவாதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


ஆனால் இழப்பீடு வழங்கப்படாவிட்டால் மேலதிகமாக 1 வருடம் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.


கடந்த 2021ம் ஆண்டு வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டபின்னர்,

சட்ட மாஅதிபர் அவருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


தொடர்ந்து இடம்பெற்ற நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே,

பிரதிவாதிக்கு எதிராக அரசுத்தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.


மேலும் பிரதிவாதிக்கு மென்மையான தண்டனை விதிக்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தை கோரினாலும்,

பிரதிவாதி நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கடுமையான குற்றத்தைச்செய்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி அத்தகைய நபர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளமுடியாது என்றும் கூறியமை குறிப்பிடத்தக்கது..