மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
tamil news: மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 10.02.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று(29.01.2025) உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இன்று(29.01.2025) கைதுசெய்யப்பட்ட மேலும் ஒரு சந்தேகநபரை நாளை வியாழக்கிழமை 30ம் திகதிவரை காவற்துறை தடுப்புக்காவலில் தடுத்துவைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது மன்னார் நீதிமன்றத்தின் மூடிய அறைக்குள் தனித்தனியாக ஆள் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.
இந்நிலையிலே ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட காற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையின்போது பிரதான சந்தேகநபர்கள் உள்ளடங்களாக 5 பேரை மன்னார் காவற்துறை கைதுசெய்தனர்.
அவர்களில் இராணுவத்துடன் தொடர்புடைய 3 பேர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டநிலையில் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
