யோசித ராசபக்சவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 9 துப்பாக்கிகள்
tamil news: மகிந்த ராசபக்சவின் மகன் யோசித ராசபக்சவிடமிருந்த 9 துப்பாக்கிகளில் 7 துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யா கோந்தா தெரிவித்துள்ளார்
இன்றையதினம்(29.01.2025) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் துப்பாக்கிகளிலிருந்து சுமார் 182 துப்பாக்கிகள் மட்டுமே மீனபெறப்படவுள்ளதாக தெரிவித்த அவர்,
யோசித ராசபக்சவிடம் மேலும் 2 துப்பாக்கிகள் இருப்பதாகவும்,
வேறு எந்த துப்பாக்கியும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
