வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

ஊடகவியலாளரின் கணவர் மரணத்தில் சந்தேகம்!


tamil news: கொழும்பு தெஹிவளை பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளர் ஒருவரின் கணவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெஹிவளை வைத்திய வீதியில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தந்தையான ஏ. சமரஜீவ(60 வயது) முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த சனவரி 1ம் திகதி காலை வழமை போன்று பணிக்கு சென்றநிலையில் வீடு திரும்பவில்லை.


இதனையடுத்து ஊடகவியலாளர் ஶ்ரீயானி விஜேசிங்க(மனைவி) தனது கணவருக்கு இரவில் தொலைபேசி அழைப்பு விடுத்தபோதிலும், அவர் பதிலளிக்கவில்லை.


தொடர்ந்து பலமுறை தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதைத்தொடர்ந்து, ஒருமுறை தொலைபேசி அழைப்புக்கு காவற்துறையினர் பதிலளித்துள்ளனர்.


இது இவ்வாறு இருக்க, தெஹிவளை ஹில் வீதியில்(Hill Street) கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கருகிலுள்ள வீடொன்றில் வசிக்கும் சட்டத்தரணி ஒருவர்,

வீட்டின் முன் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக காவற்துறைக்கு சனவரி 1ம் திகதியன்று இரவு அழைத்துள்ளார்.


இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறை குழுவொன்று முச்சக்கரவண்டியில் சம்பவ இடத்திற்கு சென்றநிலையில் அந்த இடத்தில் விழுந்துகிடந்த நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்த காவற்துறை குழு, மீண்டும் அந்த இடத்திற்குத் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றதாக சிரேஷ்ட காவற்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து 1990 அம்பியூலன்ஸ் சேவையை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, கீழே விழுந்த நபரை களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


தொடர்ந்து குறித்த நபர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று(03.01.2025) உயிரிழந்துள்ளார்.


இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் இறந்தவரின் முதுகில் பலத்த காயங்களும், தலையில் பலத்த இரத்தக்கசிவும் இருந்தது தெரியவந்துள்ளது.


இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் குறித்து காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் காவற்துறை உத்தியோகத்தர்கள் கடமை தவறினார்களா எனும் கோணத்திலும் உதவி காவற்துறை அத்தியட்சகரினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.