புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்?
tamil news: சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து குறித்த பணிகள் எதிர்வரும் 12ம் திகதிவரை முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி 2,849 பரீட்சை மத்திய நிலையங்களில் 2024 ஆண்டுக்கான தரம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டநிலையில் 323,879 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்