வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

சீமான் கள்ளு குடித்து ஆரம்பிப்பார்! நல்லசாமி அறிவிப்பு


tamil news: எதிர்வரும் சனவரி 21ம் தேதி கள் விடுதலை மாநாட்டில் சீமான் கலந்துகொண்டு மேடையிலேயே கள்ளு குடித்து போராட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளதாக 'தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்' நல்லசாமி அறிவித்துள்ளார்.


அதாவது,

எதிர்வரும் சனவரி 21ம் திகதி விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் கள் விடுதலை மாநாடு நடைபெறும் என 'தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்' நல்லசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.


இந்நிலையில் குறித்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


மேலும் இந்த மாநாட்டின் நோக்கமாக

"கலப்படம் என காரணம் காண்பித்து கள்ளு இறக்கும் உரிமையை தமிழ்நாடு அரசு பறித்துக்கொண்டது. 


ஆனால் அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை கிடையாது, தமிழ்நாடு அரசு மட்டும் கலப்படத்தை தடுக்க முடியாது என்பது போல் கூறுகிறது. அதை நாங்கள் எதிர்க்கின்றோம்."

என நல்லசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 



மேலும்,

"இந்த மாநாட்டில் கள்ளு சந்தைப்படுத்தப்படும் எனவும்,

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாங்கள் கள் இறக்குகின்றோம்.


எங்கள் மீது மது விலக்கு சட்டப்படி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?


இந்த போராட்டம் பெரும் வெற்றி பெரும் என நம்புகின்றோம்.


இந்த போராட்டத்திற்கு சீமான் மற்றும் அண்ணாமலை ஆகியோர் வருகை தருகின்றனர்.


மேலும் பல தலைவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.


நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே இதனை திட்டமிட்டிருந்தநிலையில்,

கள்ளு இறக்குவதில் தனக்கு உடன்பாடு உண்டு என சீமான் கூறியுள்ளார்.


இந்த மாநாட்டின் மேடையில் எங்களிடம் இருந்து கள்ளை வாங்கி குடிப்பதாக சீமான் தற்போது உறுதியாக தெரிவித்துள்ளார்"

இவ்வாறு நல்லசாமி குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கள்ளு இறக்குவதற்கு சீமான் தனது ஏற்கனவே ஆதரித்துவந்த நிலையில்,

மாநாடு மேடையிலேயே கள்ளு குடித்து போராட்டத்தை சீமான் தொடங்கவுள்ளமை கவனத்திற்குரியது.