வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

அனுர சீனாவுக்கு இராஜதந்திர பயணம்!


tamil news: இன்று(13.01.2025) மாலை அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு தன்னுடைய உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அநுர குமார திசாநாயக்கவின் குறித்த பயணம் சனவரி 14 முதல் 17 வரை இடம்பெறும் இந்த விசயத்தின்போது சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், சீன பிரதமர் லீ கியாங் உட்பட இராசதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.

மேலும் சீன சனாதிபதி 'சீ ஜின்பிங்' இன் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் சனாதிபதியுடன் வெளியுறவு,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்,
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும்
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே.  ஜே. பண்டார ஆகியோரும் இந்த விசயத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே உள்நாட்டில் 5 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழுள்ள 3 அமைச்சுக்களான டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்கும்;

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து  அமைச்சு என்பவற்றுக்குப் பதிலமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில்,
டிஜிட்டல் பொருளாதார பதிலமைச்சராக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்னவும்,
பாதுகாப்பு பதிலமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவும்,
நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் பொருளாதார  அபிவிருத்தி பதிலமைச்சராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதிலமைச்சராக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவும்,
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து பதிலமைச்சராக வைத்தியர் பிரசன்ன குமார குணசேனவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.