வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

அரசியற் கைதிகளின் விடுதலைக்காக தமிழர் தலைநகரில் போராட்டம்!


tamil news: இன்றையதினம்(13.01.2025) காலை 9 மணியிலிருந்து தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் போராட்டம் ஒன்று திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் நடைபெற்றுவருகின்றது.


போராளிகள் நலன்புரி சங்கம் தலைமையில் முன்னெடுத்து வருகின்ற இப் போராட்டம் விசாரணை எனும் பெயரில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு துரித தீர்வு அளிக்க அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு திருகோணமலை சார் அரசியற்கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.


அதுமட்டுமன்றி பொதுமக்களும் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் கையொப்பங்களையிட்டு அரசியற் கைதிகளின் விடுதலை நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி வருகின்றனர்.


மேலும்,

'அரசியற் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்',

'நீதிமுறை விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்படவேண்டும்',

'கைதிகளின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டும்'

எனும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப்போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.