வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

தமிழ் அரசியற்கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள்! மனோகணேசன் அழுத்தம்


tamil news:

“அரசியல் கைதிகள் இல்லை என்ற பழைய பல்லவியைப் பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யுங்கள்"

இவ்வாறு தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவர் மனோகணேசன் அவர்கள் ஜே.வி.பி அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.


அதாவது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரசியற்கைதிகள் என்று இங்கு யாரும் இல்லை என கூறியிருந்தார்.


நேற்றையதினம்(15.01.2025) அவரது கருத்து தொடர்பில் மனோகணேசன் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறையில் அரசியற்கைதிகள் என்று யாரும் இல்லை என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா சிங்களப்பெரும்பான்மை அரசாங்கத்தின் எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள்.


அரசதரப்பு அப்படிதான் சொல்லும் அவர்களுக்கு 'பயங்கரவாதி', மக்களுக்கு 'போராளி'.


பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்கப் போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படித்தான்.


இந்நாட்டில் 1971 இல் தமிழ் இளைஞரகள் ஆயுதம் தூக்கமுன்னமே ஆயுதம் தூக்கிநிலையில் அதன்பின், 1989 இலும் ஆயுதம் தூக்கி ஜே.வி.பி. போராட்டம் செய்தது.


அதன்போது கைதாகி சிறையிலிருந்த ஜே.வி.பி போராளிகளை அன்றைய சிங்கள அரசு 'பயங்கரவாதிகள்' என்றது.


ஆனால் ஜே.வி.பியினர், 'இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்' என்றார்கள்.


2015 - 2019 கால நமது நல்லாட்சியிலும்கூட இடைக்கிடையே ஓரிரு அமைச்சர்கள் இப்படிச் சொன்னார்கள்.


ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களைக் கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களைப் புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ்த்தேசியக் கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம்.


தமிழ் அரசியற்கைதிகளை அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான், இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை.


இதனால்தான் இன்றுவரை இருக்கும் தமிழ் அரசியற்கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.


ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜே.வி.பி இன்று அரசியற்கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்குப் பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகின்றது."

எனக் கூறியிருந்தார்.



மேலும்

"1971 இல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியற்போராளிகளாக பார்க்கும் ஜே.வி.பி கைதாகி சிறையிலுள்ள தமிழ் இளைஞர்களை அரசியற்கைதிகள் இல்லை என்று கூறுகின்றது.


இந்த இரட்டை வேடம் இவர்களுக்கு வாக்களித்த செந்தமிழர்களுக்குத்தான் வெளிச்சம்”

என்றமை குறிப்பிடத்தக்கது.