வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவி உயிரிழப்பு!


tamil news: மலையகத்தில் ஹசலக்க, தொரபிட்டிய பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கியநிலையில் நேற்றையதினம்(03.01.2025) உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவத்தில்,

ஹசலக்க, தொரபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தரம் 9 இல் கல்வி கற்ற மெத்மி சிதும் குமாரி(வயது 14) என்ற பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவி தனது அம்மாவிடம் கையடக்க தொலைபேசியை வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்றுள்ளார்.


சென்ற சில நிமிடங்களில் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டு மாணவியின் அம்மா, அப்பா, அக்கா ஆகியோர் அறைக்குச் சென்றுபார்த்தபோது அவள் தூங்கிக்கொண்டிருந்த இரும்புக் கட்டிலைப் பிடித்துக்கொண்டு அலறிக் கொண்டிருந்துள்ளார்.


இதனையடுத்து சிறுமியின் தாத்தா மின்னிணைப்பை துண்டித்துள்ளார்.


இதனையடுத்து ஹசலக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி, மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.


மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹசலக்க காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.