துபாயில் 14 கோடிக்கு படகு வாங்கிய பிரபல நடிகர்!
tamil news: துபாய் நாட்டில் நடிகர் மாதவன் இந்திய பெறுமதியில் சுமார் 14 கோடிக்கு சொகுசு படகு ஒன்றை வாங்கியுள்ளார்.
அதாவது,
சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட துபாய் சென்ற மாதவன், அவரது மனைவி சரிதா மற்றும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி ஆகியோர் சொகுசு படகில் அரட்டை அடித்தபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.
இந்நிலையில் குறித்த புகைப்படங்களிலுள்ள இந்த படகு நடிகர் மாதவனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துய்யது.
துபாயில் ஏற்கனவே வீடு வைத்திருக்கும் மாதவன், விடுமுறையை கொண்டாட அங்கு சென்றுவிடுவார்.
அதுபோல் படகு ஓட்டுவதற்கு அவர் துபாயில் பயிற்சிபெற்று அதற்கான அனுமதிப்பத்திரமும் பெற்றுள்ளநிலையில் 14 கோடிக்கு அவர் இந்த படகை வாங்கியுள்ளார்.
மேலும் 'டெஸ்ட்' என்ற தமிழ் படத்தில் நயன்தாராவுடன் மாதவன் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.