வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இராசதந்திர உறவைத்தாண்டி தமிழ் மக்களுடன் பயணிக்கின்றோம்! இந்திய துணைத்தூதர் பெருமை பீற்றல்


tamil news:

"வடகிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை அறிந்துசெயற்படும் 'இந்தியா' என்கின்ற சகோதரனின் கதவை எந்நேரமும் தமிழ் மக்கள் தட்டலாம்."

இவ்வாறு இந்திய துணைத்தூதர் சாய்முரளி தெரிவித்துள்ளார்.


நேற்றையதினம்(26.01.2025) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 76வது குடியரசுதின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,

"இந்தியா இராசதந்திர உறவைத் தாண்டி வடகிழக்கு தமிழ் மக்களுடன் பயணித்துவரும் சகோதரனாக மக்களின் தேவைகளையறிந்து உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.


யாழ். துணைத்தூதரகம் வடக்கு மக்களின் நல்ல நண்பனாகவும், சகோதரனாகவும் செயற்பட்டுவரும் நிலையில் யார் நண்பன்? யார் பகைவன்? என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


நாங்கள் உங்களுடன் சேர்ந்தெடுத்த தீர்மானங்கள் சில வேளைகளில் மாறுபாடுகளை ஏற்படுத்தினாலும் தமிழ் மக்களின் உரிமை மற்றும் நலன்களில் என்றும் ஆதரவாளனாக யாழ்.தூதரகம் செயற்படும்.


இந்தியமக்கள் யாழ்ப்பாண மக்களின் அறிவாற்றலை அன்றும்இன்றும் பெருமை கொள்பவர்கள் என்பதை கூறிக்கொள்வதில் பொருமையடைவதோடு,

இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நன்கு உணரும்.


ஆகவே வடக்கு மக்களின் பாதுகாவலனாகவும், சிறந்த நண்பனாகவும் யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் என்றும் செயற்படும் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்."

என அவர் மேலும் தெரிவித்தார்.