மாவீரர் வீட்டில் விசமச்செயல் - முல்லைத்தீவில் சம்பவம்!!!
tamil news: நேற்றிரவு(12.01.2025) தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மாவீரர் கதிரொளியின் தாயார் வீட்டில் இனந்தெரியாதோர் விசமச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த தாயார் இரவுநேரங்களில் தன்னுடைய பேரப்பிள்ளையின் வீட்டிற்குச்சென்று தங்குவதுண்டு. அந்தவகையில் நேற்றிரவு இல்லாத நேரத்தில் உள்நுழைந்த இனந்தெரியாதோர் சமையலுக்கு பயன்படுத்தப்டும் புளியையும், தேங்காயையும் மட்டும் திருடியபின் அந்த தாயாரின் அனைத்து உடைகளையும் நடுவீட்டுக்குள் போட்டு எரித்துவிட்டு சென்றுள்ளனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்