வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு! வீதிகளை பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை
tamil news: கிரான் பிரதேசசெயலகப்பிரிவில் புலிபாய்ந்த கற்பாதை நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் முக்கிய குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதனாலும், பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்டத்தின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் கிரான் பிரதேசசெயலாளர் பிரிவின் குடும்பிமலை, புலிபாய்ந கல் திகிலிவெட்டை, கோராவெளி, பெண்டுகள் சேனை, சாராவெளி மற்றும் முறுத்தானை கிராமங்கள் உட்பட பல்வேறு கிராமசேவகர் பிரிவுகளில் வாழும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிரான் புலிபாந்த கல் வீதியில் சுமார் 300 மீற்றர் தூரம்வரை மக்கள் வெள்ள நீரோட்டம் ஊடாக நடந்துசென்றே தங்களது பொருட்களை சுமந்து அப்பாலுள்ள படகுச்சேவை இடம்பெறும் இடத்தையடைந்து அங்கிருந்து தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படகு சேவையினை கிரான் பிரதேசசெயலகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதேபோல சந்திவெளி துறை ஊடான போக்குவரத்திற்கான படகு சேவை கோறளைப்பற்று பிரதேச சபை மேற்கொண்டு வருகிறது.
இருந்தபோதிலும் பாதை ஊடாக மக்க் அச்சமின்றி தங்ளது பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.
தற்போது குறித்த பாதை பழுதடைந்துள்ளதால் படகில் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்வதில் அச்சநிலை உள்ளதாக தெரிவித்த பிரதேச மக்கள்,
புலிபாய்ந்த கல் பிரதானவீதிக்கான பாலத்தினை அபிவிருத்தி செய்துதந்தால் வெள்ளக்காலத்தில் தங்களது போக்குவரத்தினை மேற்கொள்ள இலகுவாக அமையும் என தெரிவிக்கின்றனர்.
குறித்த மக்கள் திகிலிவெட்டை, குடும்பிமாலை போன்ற அயல் கிராமங்களுக்கு தங்களது போக்குவரத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் மாவட்டத்தின் சில குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் ஆற்றை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுவதை தவீர்த்துக்கொள்ளவேண்டும்.
அத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மினவர்களும் மிக அவதானத்துடன் இருக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

