இந்தியாவிலிருந்து எடுத்துவரப்பட்ட முருகப்பெருமான் மாவிட்டபுரத்தில்!
tamil news: இலங்கை கதிர்காமத்தில் எழுந்தருச்செய்வதற்காக எடுத்துவரப்பட்ட முருகப்பெருமானுக்கு இன்றையதினம்(20.01.2025) மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்தில் விசேட மகாயாகம் இடம்பெற்றது.
அதாவது,
இந்தியா திருச்செந்தூரிலிருந்திருந்து எடுத்துவரப்பட்ட வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் உள்ள சிலை பழனியில் விசேட மகாயாகம் இடம்பெற்று கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து மாவை கந்தன் ஆலயத்தில் விசேட மகாயாகம் இடம்பெற்று சில வாரங்கள் மாவை கந்தநாணயத்தில் தங்கியிருந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் விசேட பூசைவழிபாடுகளை மேற்கொண்டு,
உகந்தை முருகன் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
கொழும்பு தலைநகருக்கு முருகப்பெருமான் எடுத்தசெல்லப்பட்டு கொழும்பிலிருந்து கதிர்காமம் வரையிலான முருகன் ஆலயங்களில் விசேட பூசைவழிபாடுகளை தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் கதிர்காமத்தில் முருகப்பெருமானாக எழுந்தருளச்செய்யப்படவுள்ளார்.
மேலும் இந்நிகழ்வுகள் கதிர்காம ஆலய நிர்வாக உறுப்பினரும், முன்னாள் வடமாகாண ஆளுநருர் ஜீவன் தியாகராசா தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

