வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

யாழில் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளதாக கூறி குடும்பஸ்தரிடம் இலட்சக்கணக்கில் மோசடி!


tamil news: யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத் தலைவரிடம் இணையத்தை பயன்படுத்தி வங்கியிலிருந்து சுமார் 2 லட்சம் ரூபா பணம் மோசடிசெய்யப்பட்டுள்ளது.


குப்பிழான் வடக்குப் பகுதியில் கட்டடபொருள் விற்பனைநிலையமொன்றை நடத்திவரும் 36 வயதான இளம் குடும்பத்தலைவரே இவ்வாறு மோசடிக்கு உள்ளாகியுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த செவ்வாய்க்கிழமை(21.01.2025) பிற்பகல் குறித்த இளம் குடும்பத்தலைவரின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்ட ஒரு நபர்

"தாங்கள் ஒரு நிறுவனம் ஒன்றிலிருந்து பேசுகின்றோம்.


கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி உங்களுக்கு 5 லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.


இதுதொடர்பாக குறிஞ்செய்தி உங்களுக்கு அனுப்பப்பட்டது.


நீங்கள் குறிஞ்செய்தியை பார்க்கவில்லையா?"

என வினவியுள்ளார்.


அதற்கு குறித்த இளம் குடும்பத்தலைவர்

"அப்படியொரு தகவலை நான் பார்க்கவில்லை."

என பதில் வழங்கியுள்ளார்.


"நீங்கள் குறிஞ்செய்தியை நீக்கிவிட்டீர்களா?"

என கேட்டபோது, அதற்கு குடும்ப தலைர்

"ஆம்"

எனப் பதில் வழங்கியுள்ளார்.


இந்நிலையில் மெகா அதிர்ஷ்டத்திற்கான காலக்கேடு முடிவடையவிருப்பதால் தான் தற்போது உங்களுக்குத் தொலைபேசியில் அழைப்பெடுத்துள்ளதாகத் தெரிவித்து,

உங்கள் வங்கி இலக்கத்தைக் கூறுமாறு கோரவே,

தனக்கு உண்மையிலேயே 5 லட்சம் ரூபா கிடைத்திருப்பதாக எண்ணி தனது வங்கி இலக்கத்தை குறித்த குடும்கஸபதலைவர் தெரிவித்துள்ளார்.


அதன்பின் உங்களுக்கு 6 இலக்கங்களைக் கொண்ட ஒரு குறிஞ்செய்தி வரும்.


அதனைத் தம்மிடம் கூறுமாறும் வினாவவே,

இளம் குடும்பத்தலைவரும் அதனைக் கூறியுள்ளார்.


இதனையடுத்துக் குறித்த இளம்குடும்பத்தலைவரின் வங்கிக் கணக்கிலிருந்து சடுதியாகப் பணத்தொகை குறைவடைந்துசென்றது.


இதனை சுதாகரித்துக்கொண்ட இளம் குடும்பத்தலைவர் புன்னாலைக்கட்டுவன் வடக்கில் தனது சேமிப்புக்கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு விரைந்துசென்று நடந்தவற்றைத் தெரிவித்து தனது சேமிப்புக் கணக்கின் செயற்பாடுகளைத் தற்காலிகமாக முடக்கியுள்ளார்.


இதனால் அவரது எஞ்சிய பணம் காப்பாற்றப்பட்டுள்ளது.


இதன்பின்னர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர் சுன்னாகம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


மேலும் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.