வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக விசாரணை ஆரம்பம்!!!


tamil news: போக்குவரத்து காவற்துறையினரின் உத்தரவுகளை மீறிச்செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கெதிராக காவற்துறையினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.


அதாவது,

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்புக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்துப்பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவற்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இதனையடுத்து சம்பவம் தொடர்பான விடயங்கள் இன்று(21.01.2025) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.


மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்தானது இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


மேலும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மோட்டார் வாகனச்சட்டம் மற்றும் தண்டனைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படும் என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.