வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

'கிளீன் சிறீலங்கா' குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வது மட்டுமல்ல! கூறுகிறார் கிழக்கு ஆளுநர்


tamil news:

"கிளீன் சிறீலங்கா என்பது குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது மட்டுமல்ல, சுற்றுச்சூழல், சமூக மற்றும் மனப்பான்மை மேம்பாட்டோடு செயல்படும் நீண்டகால திட்டமாகும்"

இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.


இன்றையதினம்(20.01.2025) கிழக்கு மாகாண சபையின் அமைச்சு செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.


கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர்  ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூடுதலாக மாகாணசபையால் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம்செலுத்துமாறு நிறுவனத் தலைவர்களையும் கேட்டுக்கொண்டார். 


அதிலும் தொடர்ச்சியான செலவுகளைக் கட்டுப்படுத்த நிறுவனமட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அவர் கூறினார்.


மேலும் ஆளுநர் அலுவலகம் இந்தப் பணிகளை மேற்கொள்ளத்தொடங்கியுள்ளது என்றும் கூறிய அவர் ஒக்டோபர் 2024இற்கு முன்பு, அலுவலகத்தின் வாகனங்களுக்கான மாதாந்த எரிபொருள் செலவு சுமார் 1.62 மில்லியன் இலங்கை ரூபாய்கள் செலவுகளாக இருந்தது,

ஆனால் ஒக்டோபர் மாதம் முதல் மாதாந்த எரிபொருள் விநியோகசெலவு எரிபொருள் வாகனங்களுக்கான கட்டணம் 2 - 3 இலட்சங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 


அத்துடன் பயன்படுத்தப்படாமலிருக்கும் பழுதடைந்த வாகனங்களை பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், பயன்படுத்தமுடியாத வாகனங்களை சட்டப்பூர்வமாக ஏலம்விடவும், மாகாண சபைக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களின் பாழடைந்தநிலை குறித்து கவனஞ்செலுத்தி பராமரிப்பை மேற்கொள்ளவும் மாகாண சபையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


மேலும் இந்தக் கூட்டத்தில், மாகாண அமைச்சுக்கள் மற்றும் துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நிறுவனத் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.