வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுகிறார் முன்னாள் ஜனாதிபதி! கூறுகிறார் நாமல்


tamil news: பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல, அவை உரிமைகளாகும்.


எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.


இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் 


இந்றையதினம்(20.01.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற நாம் தயாராகவே உள்ளோம்.


காரணம் இது எமது சொந்த குடியிருப்பல்ல.


முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்.


உத்தியோகபூர்வ இல்லம் என்பது முன்னாள் சனாதிபதிகளுக்கு பாதுகாப்பினை அடிப்படையாகக்கொண்டு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளவையாகும்.


எவ்வாறிருப்பினும் அந்த இல்லத்தை தற்போதைய சனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு யாருக்காவது விற்கவேண்டிய தேவை இருந்தால் அதற்காக முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அங்கிருந்து வெளியேற்ற நினைத்தால் அதனை நாம் எதிர்க்கப்போவதில்லை.


ஆனால் அதனை உத்தியோகபூர்வமாக எழுத்துமூலம் அறிவிக்கவேண்டும்.


அந்த உத்தியோகபூர்வ இல்லம் பலவந்தமாக பெற்றுக்கொண்டதல்ல.


அரசியலமைப்புரீதியாக கிடைக்கப்பெற்றதாகும்.


இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட நியதியுமல்ல, உலகில் எந்தவொரு நாட்டிலும் இந்த நடைமுறையே காணப்படுகின்றது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மாத்திரமின்றி சகல முன்னாள் அரச உத்தியோகத்தர்களுக்கும் இது பொருந்தும்.


முன்னாள் அரச தலைவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் பழிவாங்கப்படுகின்றனரா இல்லையா என்பது ஜனாதிபதி அநுரவின் உரைகளிலும் செயற்பாடுகளிலும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது.


முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு என்பது சிறப்புரிமை அல்ல, அது உரிமையாகும்.


இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் பல நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம்.


எனவே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.


எது எவ்வாறிருப்பினும் முன்னாள் ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு அவர் தயாராகவே இருக்கின்றார்."

என குறிப்பிட்டார்.