வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வெளிநாட்டு மது, 19 இலங்கை கடவுச்சீட்டுகளுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கைது!


tamil news: இன்றையதினம்(03.02.3035) சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2,500,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுப்போத்தல்களுடன் தமிழ்நாட்டு பிரசை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தமிழ்நாடு சென்னை நகரத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியருவதாவது,

சென்னை நகரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் இந்தியாவிலிருந்து இன்று பிற்பகல் 02.00 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.


பின்னர் சந்தேக நபர், Green Channel வழியாக விமானநிலையத்தை விட்டு வெளியேறமுயன்றபோது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.


இதன்போது சந்தேகநபர் கொண்டுவந்த பயணப்பொதியிலிருந்து சுமார் 88 வெளிநாட்டு மதுப்போத்தல்கள் மற்றும் 19 இலங்கை கடவுச்சீட்டுகள் என்பன குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதனையடுத்துஇ கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது அவரை எதிர்வரும் 06ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.