வடக்கில் 14 இளைஞர்களுடன் களமிறங்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!
tamil news:
தமிழ்த்தேசியம் சார்ந்த தூய அரசியலை முன்னிறுத்தி வவுனியா வடக்கில் ஆட்சி அமைப்பதை நோக்கமாகக் கொண்டு, 14 இளைஞர்களை முன்னிறுத்தி தேர்தலுக்கு களமிறங்குவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி(TNPF) அறிவித்துள்ளது.
நேற்றையதினம்(18.03.2025) வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவை தாக்கல்செய்த பின்னர் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் S. தவபாலன் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் மாநகர சபை உட்பட 4 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கடுமையான போட்டியாக இருப்பினும், தமிழ்த்தேசிய உரிமைக்காக நேர்மையாக அரசியல் செய்பவர்களாக நிச்சயமாக வெற்றி பெறுவோம்."
எனக் குறிப்பிட்டார்.
"வவுனியா வடக்கிற்கென சிறந்த வேட்பாளர்கள், குறிப்பாக இளைஞர்களை அதிகமாக தேர்வு செய்துள்ளோம்.
மொத்தம் 14 இளைஞர்கள் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அனுபவமுள்ள நிர்வாகிகள், உள்ளுராட்சித் திறமையுள்ளவர்கள் அனைவரும் இத்தேர்தலில் கலந்து கொள்கின்றனர்.
வவுனியா வடக்கு பகுதிகளில் மத வழிபாடுகள் தடுக்கப்படுகின்றன, நில ஆக்கிரமிப்பு நிகழ்கின்றது.
இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வாக, தூய்மையான அரசியலை முன்வைத்து ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு.
தமிழ்த்தேசிய அடிப்படையில் செயல்படும் ஒரு சரியான உள்ளுராட்சி மன்றத்தை உருவாக்குவோம்.
மக்கள் ஆதரவு வழியாக, உள்ளுராட்சி மன்றங்களை தமிழ்த்தேசிய நோக்கோடு முன்னெடுப்போம்."
என அவர் உறுதியாக தெரிவித்தார்.
.jpg)