காதலி குத்திக்கொலை: காவற்துறையில் சரணடைந்த இளைஞன்!
tamil news:
புத்தளம் பகுதியில் தனது காதலியை கத்தியால் குத்திக்கொன்றதாகக் கூறப்படும் இளைஞன் வென்னப்புவ காவற்துறை நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த விமல்கா துஷாரி(19 வயது) என்பவர், வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் வசித்துவருபவர்.
சந்தேகநபர், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன்.
இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதல் தொடர்பு இருந்தது.
ஆனால், உறவை முடிக்க விரும்பியதாகக் காதலி தெரிவித்தமையால் ஆத்திரமடைந்த இளைஞன் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலியின் வீட்டில் இடம்பெற்ற இதுபற்றிய வாக்குவாதத்தின் போது,
இளைஞன் கத்தியால் தாக்கியதில், படுகாயமடைந்த யுவதியை உடனே நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு, சந்தேகநபர் நேற்று மாலை வென்னப்புவ காவற்துறை நிலையத்தில் சரணடைந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
