ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கட் வீரர் மறைந்தார்!
sports news:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும்,
வலுவான இடதுகை பேட்ஸ்மேனுமான போப் கௌபர் தனது 84வது வயதில் மரணமடைந்தார்.
1940 ஆம் ஆண்டு மெல்போர்னில் பிறந்த கௌபர்,
1964 முதல் 1968 வரையிலான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
தனது 46 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 2061 ஓட்டங்களை குவித்த அவர்,
5 சதங்களும் 10 அரைசதங்களும் பெற்றுள்ளார்.
இவரை மிகவும் பேசப்பட வைக்குமாறு 1966ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவர் விளாசிய 300 ஓட்டங்கள் வைக்கின்றன.
இந்த இன்னிங்ஸ் 12 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் மூன்று சதம் எடுத்த முதலாவது வீரராக அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.
இந்த சாதனை 2003ஆம் ஆண்டு வரை எவராலும் முறியடிக்கப்படவில்லை;
மேத்யூ ஹேடன் ஜிம்பாப்வேக்கு எதிராக 380 ஓட்டங்கள் எடுத்தபிறகே புதிய சாதனை ஏற்பட்டது.
போப் கௌபரின் இழப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
