வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

யாழில் 1,600 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!


tamil news:

யாழ்ப்பாணம் சுதுமலை பிரதேசத்தில் சுமார் 1,600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய் காவற்துறையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த காவற்துறையினர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது 2 வகையான சுமார் 1,600 போதைமாத்திரைகளை கைப்பற்றினர்.


தொடர்ந்து கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு
இளைஞர்களை கைதுசெய்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவற்துறை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் சம்பவத்தின் போது கைதுசெய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.