சட்டவிரோத மணல் கடத்தல்: பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூடு!!!
tamil news:
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 'டிப்பர்' ரக வாகனம் மீது காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த நபர் தற்சமயம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் இன்றையதினம்(02.03.2025) காலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பரை காவற்துறையினர் வழிமறித்துள்ளனர்.
ஆனால் காவற்துறையின் கட்டளையை மீறி டிப்பர் பயணித்த நிலையில் டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒருவர் காயமடைந்தநிலையில் இன்னொருவர் தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


