வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இந்தியாவுடன் முழு அளவில் போர்! எச்சரிக்கை விட்ட பாக்கிஸ்தான்


tamil news:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் முழுமையான போர் உருவாகும் அபாயம் இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.


தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர்,

"பாகிஸ்தானில் இயங்கும் சில குழுக்கள் குறித்து அமெரிக்கா வலியுறுத்தியபோது அவர்களுக்காகவே நாங்கள் பல ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுத்தோம்.


சோவியத் யூனியனுக்கு எதிரான காலத்தில் தொடங்கி பலதரப்பட்ட நிகழ்வுகளில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்துள்ளது."

என்றார்.


ஆனால் குறித்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தது.


அட்டாரி எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடுதல்,

பாகிஸ்தான் குடியுரிமையாளர்களுக்கான சார்க் விசா விலக்குத் திட்டத்தை இடைநிறுத்துதல் மற்றும் பாகிஸ்தானியர் இந்தியாவை விட்டு புறப்படும் நேரம் 40 மணிநேரமாகக் குறைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அதுமட்டுமன்றி 1960ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்துநதி நீர் ஒப்பந்தத்தின் செயல்பாடுகளையும் இந்தியா இடைநிறுத்தியுள்ளது.


இந்த தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி,

“தாக்குதலில் ஈடுபட்டவர்களும், அதைத் திட்டமிட்டவர்களும் கற்பனைக்கு எட்டாத தண்டனையை எதிர்கொள்வார்கள்.


பயங்கரவாதத்துக்கு எதிரான ஒட்டுமொத்த நடவடிக்கைக்கு இது ஒரு தொடக்கம்”

எனக் கண்டித்து கருத்து தெரிவித்தார்.


மேலும் அவர்,

“140 கோடி மக்களின் உறுதியே பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகளை தளர்த்தும்”

எனக் கூறியுள்ளார்.