ஊழல்தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ரணில்!!!
tamil news:
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஏப்ரல் 28ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இச்செய்தி அவரது சட்டத்தரணியின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பான விசாரணையின் படி,
அதில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டிருந்த கருத்துக்கள் குறித்த வாக்குமூலம் அளிக்குமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு முன்னர் அவரது சட்டத்தரணி வெளிநாட்டில் இருப்பதால் தாம் முன்னிலையாகமுடியாது என அவர் தெரிவித்திருந்த நிலையில்,
தற்போது நேரில் ஆஜராக தயார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.