வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மட்டக்களப்பு பாடசாலை மாணவி திடீரென மயங்கி உயிரிழப்பு!!!


tamil news:

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம் பகுதியில் உள்ள பாடசாலையில் இன்றையதினம்(25.04.2025) மதியநேரத்தில் மாணவி ஒருவர் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் வகுப்பறையில் இருந்த மாணவி ஒருவர் மயங்கி  விழுந்துள்ளார்.


உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதும் மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது.


உயிரிழந்த 16 வயது மாணவி கிரான்குளம் 8ஆம் பிரிவைச் சேர்ந்த இராஜன் வினோஜினி என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.


இவர் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தயாராகி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மாணவியின் உடல் தற்போது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,

நீதிமன்ற அனுமதியுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களுவாஞ்சிக்குடி காவற்துறையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.