ஆரம்பப்பள்ளி அதிபரின் முன்மாதிரியான செயல்!
Social Event:
இன்றையதினம்(25.04.2025) வட்டுக்கோட்டை கார்த்திகேய வித்தியாலய மாணவர்களுக்கு காலைப்பிராத்தனை நேரத்தில் யோகாசன பயிற்சி வழங்கப்பட்டது.
இதனை குறித்த வித்தியாலயத்தின் அதிபரான சூரியகுமார் சசீதரன் அவர்களே முன்னின்று நடாத்தியமை ஏனையோருக்கு உதாரணமாகியுள்ளது.
இதன்போது சூரிய வணக்கம் உட்பட சில யோக ஆசனவகைகளும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
அண்மைக்காலங்களில் மாணவர்களிடையே மனம் சார் அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில் குறித்த பாடசாலையின் செயல் முன்மாதிரியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
சமூக நிகழ்வுகள்