வாழ்க்கைச் செலவு 4 ஆண்டுகளில் இரட்டிப்பு: மத்திய வங்கியின் மலைக்கவைக்கும் தகவல்
tamil news:
நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில், குறிப்பாக 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் அண்மைய ஆண்டான 2024 இல் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட உயர்வு,
2023 இன் ஒப்பீட்டில் குறைவாகவே பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார்.
இந்நிலையில் பணவீக்கம் இப்போது மெல்ல குறைந்து வருவதால் மக்களுக்கு அதனால் சற்றே நிவாரணம் கிடைத்தாலும்,
2021 இன் விலை நிலைகளுடன் ஒப்பிட்டால், இன்று மக்கள் அதிக செலவில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.
"2021 இல் இருந்த நிலையைப் பார்க்கும்போது தற்போதைய வாழ்க்கைச் செலவு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
இது பொதுமக்கள் அரச ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் வணிகம் செய்வோரின் வாழ்வை பெரிதும் பாதித்துள்ளது.
வருமானம் ஒருபுறமிருக்கும்; ஆனால் செலவு உயர்வதன் காரணமாக நிதிச் சுமை அதிகமாகியுள்ளது."
என அவர் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து,
"பணவீக்கம் குறைவதால் சந்தை நிலைமை சற்று சீராகி வருகின்றது.
இருப்பினும், மக்களின் உண்மையான வருமானத்தை மீளக் கட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும்.
உற்பத்தித் திறனை மனதில் வைத்தே சம்பள அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்."
என அவர் கருத்து வெளியிட்டார்.
