இலங்கையில் முகம் வெண்மையாகும் கிரீம்கள் மற்றும் லோசன்கள் தொடர்பான எச்சரிக்கை!!! வெளியான பட்டியல்
tamil news:
இலங்கை சந்தையில் விற்பனைக்குள்ளாகும் முகம் வெண்மையாக்கும் சில கிறீம்கள் மற்றும் தோல் பராமரிப்பு லோசன்களில் மனித உடலுக்கு தீங்கிழைக்கக்கூடிய அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனைகளின் விளைவாக,
இவ்வாறு சில தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட அதிக அளவில் ஆபத்தான உலோகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து நுகர்வோர் விவகார ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் பாதுகாப்பு வரம்புகளை மீறும் தயாரிப்புகளின் பெயர்கள், அவற்றின் உலோக செறிவு அளவுகள் மற்றும் அவை குறித்த விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் பொதுமக்கள் பாதுகாப்பு தரங்களை பின்பற்றாத கிறீம்கள் மற்றும் லோசன்களை வாங்குவதிலிருந்து விலகி, சுகாதாரத்துக்கு உகந்த தயாரிப்புகளை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கடுமையாக அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



