இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் கடும் பதில்!!!
tamil news:
இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல் குறித்து பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது திட்டமிடாமல் மேற்கொள்ளப்பட்டதோடு யுத்தத்தைக் தூண்டவும் வகுக்கின்றது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இன்றையதினம்(07.05.2025) அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதாவது,
இந்திய விமானங்கள் சர்வதேச எல்லையை மீறி பாகிஸ்தானின் முரிட்கே, பஹாவல்பூர், கோட்லி மற்றும் முஸாஃபராபாத் பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் விமான போக்குவரத்துக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் முகம்மட் ஷெஹ்பாஸ் ஷரீப் இந்த தாக்குதலை
"நன்கு திட்டமிடப்பட்ட போர் நடவடிக்கை.
இந்தியாவின் இந்த அத்துமீறலுக்கு பாகிஸ்தான் தக்கபதிலை வழங்கும் உரிமை பெற்றுள்ளது.
அந்த பதில் தற்போது செயல்படுத்தப்பட்டுவருகின்றது"
என தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளும், மக்களும் எந்தவொரு எதிரியை எதிர்கொள்ளும் திறனும் துணிவும் பெற்றவர்கள் எனவும்,
எதிரியின் தீய நோக்கங்கள் எப்போது வெற்றி பெறமாட்டாது எனவும் அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக்குழுவுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் உறுதிசெய்துள்ளார்.
இந்த சம்பவம் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தாக்குதலுக்குப் பின் நிகழ்ந்தது.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தொடர்புடையது என இந்தியா குற்றம்சாட்டியுள்ள நிலையில் பாகிஸ்தான் அதனை முற்றாக நிராகரித்துள்ளது.
இதனிடையே, பாகிஸ்தானும் இந்திய எல்லையின் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன.