தந்தை செல்வாவின் நினைவுநாளை மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி நினைவுகூர்ந்தது!
tamil news:
மட்டக்களப்பின் பட்டிப்பளை பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட அம்பிளாந்துறையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வா அவர்களின் நினைவு நாள் நேற்றையதினம்(26/04/2025) உற்சாகமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பட்டிப்பளை பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் செ.நகுலேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பட்டிப்பளை பிரதேசக் கிளையின் பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதனுடன் வாலிபர் முன்னணி, மகளிர் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் நிகழ்வில் பங்கேற்று தந்தை செல்வா அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.