கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: போராடிய ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்!!!
tamil news:
கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் மரணமடைந்த சம்பவத்துக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல்களை சந்திக்கநேர்ந்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஊடகசந்திப்பில் கருத்துத்தெரிவித்த அவர்,
"போராட்டத்தில் பங்கேற்ற சில ஆசிரியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் அவதூறு வெளியிடப்பட்டு வருகின்றது.
இது கவலைக்குரிய நிலை.
இந்த சூழ்நிலைக்கு உடனடி தீர்வு வழங்க அரசாங்கம் மற்றும் காவற்துறையின் கவனம் திரும்பவேண்டும்."
என தெரிவித்தார்.
